சூர்யா படத்திற்கு பெண்களுக்கு தனியாக சிறப்பு காட்சி..!


விக்னேஷ் சிவன் டைரக்சனில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. வழக்கமாக முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் தானே சிறப்புக்காட்சியை பார்த்து ரசிப்பார்கள். ஆனால் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்காக திருவனந்தபுரத்தில் சூர்யாவின் ரசிகைகளுக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனையும் துவங்கியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் ரசிகைகள் சிறப்பு காட்சி திரையிடப்படுவது சூர்யாவின் படத்திற்குத்தான் என போஸ்டருடன் விளம்பரம் வெளியாகியுள்ளது.

Leave a Response