அரசியல்வாதிகளை காக்கைகளாக விமர்சித்த பார்த்திபன்..!


சமீபத்தின் ஆர்.கே.நகரில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது சினிமா இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்து தாக்கியுள்ளார்.

“யாகாவாராயினும் நாகாக்க, அன்னியர் மீது பல்போட்டு பேசிய வாக்கை காக்க…. எது பற்றியும் கவலை கொள்ளாமல் 64 வருடங்களாக இந்தியர்களின் வாக்குகளை கூட்டமாய் ஏப்பமிடும் காக்கைகளாக நம் அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டிருந்தார்

அதே பக்கத்தில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ‘இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கினால் ரவுடிகள், முறைகேடானவர்கள் கையில் அதிகாரம் செல்லும். அவர்களுக்கு இனிமையான நாக்கும், வேடிக்கையான இதயமும் இருக்கும். தண்ணீ, காற்றுக்கு கூட வரி விதிக்கும் நிலைமை இந்தியாவில் உருவாகும்’ என்று கூறியதையும் வெளியிட்டுள்ளார்.

பார்த்திபன் என்றாலே நக்கலும் நையாண்டியுமான கருத்துக்கள் புதிதா என்ன..?

Leave a Response