கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம், மற்றும் விஜய்சங்கர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ளார் விக்ரம். இதில், தமன்னா ஹீரோயினாக நடிக்க, சூரி, ஆர்.கே.சுரேஷ், மதுமிதா என்று பல நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் விக்ரம் வட சென்னை பாஷையிலும் பேசி அசத்தியுள்ளாராம். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளை வெறும் 10 நாட்களில் முடித்துள்ளார். இப்படத்தை வரும் பொங்கலன்று வெளியிட இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.