சென்னை கடற்கரையில் செத்துமிதக்கும் மீன்கள், காரணம் என்ன தெரியுமா?

சென்னை பெசண்ட்நகர்,பட்டினப்பாக்கம் பகுதிகளில் அதிக அளவு மீன்கள் செத்து மிதக்கின்றன.

அடையார் முகத்துவாரத்தில் இனப்பெருக்கத்திற்காக வந்த மடவை வகை மீன்கள் கழிவு நீர் அதிகமாகி ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் லட்சக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன என்று தெரிகிறது.

கடலை நாம் குப்பை தொட்டியாக ஆக்கியதன் விளைவுகளை நாம் கண்கூடாக பார்க்க ஆரம்பித்துவிட்டோம். மாநகர கழிவுகள், அனல் மின் நிலையங்கள், அணு மின் நிலையங்கள், ரசாயன தொழிற்ச்சாலை, POP யில் செய்த பிள்ளையார் சிலைகள், துரப்பணிகள் என எல்லா கழிவுகளையும் கடலில் கொண்டுபோய் கொட்டியதால், இன்று கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகி செத்து மடிகின்றன.

இதைப்போன்ற கழிவுகள் கடலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை குறைத்து கடல் வாழ் உயிரினங்கள் மிக அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன என பல்வேறு தரவுகள் சொன்னாலும், அதிகார வர்க்கம் எதை பற்றியும் கவலைப்படாமல் வளர்ச்சி என்கிற பெயரில், அழிவு திட்டங்களை செயல்படுத்தியத்தின் விளைவுகளை, மானுட சமூகம் உணர ஆரம்பித்துள்ளது.

ஒட்டுமொத்த சூழலலையும் கெடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறோம் நாம்?

வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக நினைத்தால், வந்தால் பார்ப்பதற்கு ஒன்றும் இருக்காது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Leave a Response