நவம்பர் 27 – மாவீரர் நாள் உருவான வரலாறு

அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 26,

மாவீரர் நாள் என்பது நவம்பர் 27,

தலைவர் பிறந்த நாளைத்தான் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள், எழுதுகிறார்கள். பல உணர்வாளர்களுக்குக் கூட இந்த வேறுபாடு தெரியவில்லை.

மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள்.

தமிழீழத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுவரப்பட்டு,அவரை பிழைக்க வைக்க அவரது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காமல், தலைவரும்,தோழர்களும் கண்கலங்கி நிற்க 27.11.1982 அன்று மாலை 6.05 மணிக்கு சங்கர் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறார்.

தமிழீழ விடுதலைக்காக முதற் களப்பலியான லெப்.சங்கரின் நினைவுநாள், தமிழீழ தேசத்தின் விடிவுக்காக தாயின் மடியில் புதைக்கப்பட்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூரும்மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தனது இனிய உயிர் அர்ப்பணிப்பால் விடுதலைக்கு வித்திட்டு உரமான மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான இந்நாள்,தமிழீழத்தின் தேசிய நாளாகக் கருதப்படுகிறது.சங்கர் உயிர் பிரிந்த நேரமான 6.05 மணிக்கு,மாவீரர் நாளில் மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.

ஓவியர் புகழேந்தி

Leave a Response