அமெரிக்காவில் பறையிசையைப் பரப்பும் கணினி வல்லுநர்கள்

அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் ஒன்றான செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் அமெரிக்காவிற்கும் பறை இசையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர்.

அமெரிக்காவிலும் தமிழர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வரும் பொங்கல் விழாவிலும் பறை நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

அமெரிக்க பல்கலைக்கழங்களுடன் இணைந்து தமிழ் மொழியியல் இசையாக பதிவு செய்யும் முயற்சியிலும் உள்ளார்கள்.

ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நகரத்தில் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடனத்துடன் பறை இசை எழுப்பி தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்தை செயின்ட் லூயிஸ் தமிழ் ஆர்வலர்கள் புதுப்பித்து வருகிறார்கள்.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பொற்செழியன், புவனேஸ்வரி, நந்தகுமார், செந்தில் நாயகி, வீணா, அசோக், ரம்யா, யசோதா மற்றும் பிரிதிவிராஜ் ஆகிய அனைவருமே கணினி துறையில் வல்லுனர்கள் ஆவார்கள்.

தமிழ் ஆர்வத்தினால் தமிழர்களின் பாரம்பரியக் கலையை அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அமெரிக்கர்களுக்கு தமிழர்களின் தொன்மையை எடுத்துரைக்கவும் இந்த அரிய முயற்சியில் பங்கெடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் எந்த ஒரு விழா என்றாலும் மலையாளத்தாரின் செண்டைமேளத்தையும் பார்ப்பனர் புகுத்திய கலாச்சாரத்துடன் கொண் டாடி வரும் வேலையில் அமெரிக் காவை அதிரவைத்த பறைஇசை இனி அனைத்து பொது நிகழ்ச்சியிலும் ஒலிக்குமாம், எந்த தமிழிசையை அமங் கலம் என்று ஒதுக்கிவைத்தார்களோ அதே இசை இன்று மேற்குலகில் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.- தமிழ்விவசாயி

Leave a Response