ஈரோட்டில் தொடர்வண்டி மறியல் நாம் தமிழர் கட்சியினர் கைது

தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக்கடற்ப்படையைக் கண்டித்தும் இந்தியக் கடற்ப்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழர் விரோத மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுக்க போராட்டங்களை நடத்த நாம்தமிழர் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தார் சீமான்.

இதைத் தொடர்ந்து ஈரோடை மாவட்ட நாம்தமிழர் கட்சியின் சார்பில் ஈரோடை மாநகர செயலாளர் லோகுபிரகாசு தலைமையில்
தொடர்வண்டி மறியல்போராட்டம்
நடைபெற்றது.

இதில்
ஈரோடை மாவட்டத்தை சார்ந்த சங்கர், செழியன்,மூர்த்தி,ஜெகநாதன்,சுரேசுகுமார் உள்ளிட்ட நாம்தமிழர் கட்சியினர் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

இது தொடர்பாக ஈரோடை மேற்கு தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன் கூறும்போது….

இந்த 2017 ஆவது ஆண்டில் மட்டும் இந்திய கடற்படை தமிழக மீனவர்கள் மீது நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது சொந்த நாட்டு மீனவர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையையும் இதை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளையும் நாம்தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கூறினார்.
அதன்பிறகு போராட்டத்தில் பங்கேற்ற
அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response