விக்ரம்-சூர்யா படங்களுடன் மோதும் மம்முட்டி..!


நடிகர் மம்முட்டி நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடித்து நீண்ட நாளாகிவிட்டது.. அந்தக்குறையை போக்கும் விதமாக இயக்குனர் ராமின் டைரக்சனில் அவர் நடித்துவரும் பேரன்பு படமும் நீண்டகாலமாக தயாரிப்பில் உள்ளது. ஒருவழியாக இந்தப்படத்தை பொங்கல் பண்டிகையில் சூர்யா, விக்ரம் படங்களுடன் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

மம்முட்டியை பொறுத்தவரை மௌனம் சம்மதம், தளபதி, மறுமலர்ச்சி என தமிழில் அவர் நடித்த வெற்றிப்படங்கள் எல்லாம் பொங்கல் பண்டிகையில் ரிலீசானவை தான். அந்தவகையில் ‘பேரன்பு’ படத்திற்கும் இந்த பொங்கல் சென்டிமென்ட் கைகொடுக்கும் என நம்பலாம்.

Leave a Response