தெலுங்கு ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100% காதல்…!


தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘100% லவ்’. இந்தப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இயக்குனர் சந்திரமௌலி என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். நாயகனாக ஜி.வி. பிரகாஷ் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

இந்தப் படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது. நடிகை லாவண்யா திரிபாதிக்கு பதிலாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் நாயகி ஷாலினி பாண்டே தமிழில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடவுள்ளனர்

Leave a Response