தந்திரமாக மின்கட்டணத்தை அதிகரித்திருக்கிறது தமிழக அரசு

தமிழகத்தில் மின் பயன்பாட்டு அளவை கணக்கிட, ‘எலக்ட்ரோ மெக்கானிக்கல்’ அளவிகள் (மீட்டர்கள்) பயன் பட்டு வந்தன.

இந்நிலையில் மின் பயன் பாட்டு அளவை துல்லியமாக கணக்கிட, கடந்த சில ஆண்டு களுக்கு முன், மின்னணு அளவிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பழையஅளவிகளை மாற்றிவிட்டு புதியனவற்றைப் பொருத்தும் பணி வெகுவேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் புதியகருவியின் மூலம் அரசாங்கத்திற்கு வருவாய் அதிகரித்திருக்கிறது. எப்படி என்றால்?
பழைய மெக்கானிக்கல் மீட்டர் களில் துல்லியமாக மின் நுகர்வை அறிய முடியாது. கைபேசிக்கு மின்னேற்றம் (செல்போன் சார்ஜ்) செய்யப்படும்போது அது பதிவாகாமல் போகும். ஆனால், புதிய மீட்டர்கள் அதைக் கூட துல்லியமாகப் பதிவு செய்யும் என்று மின்வாரியத்தினர் சொல்கிறார்கள்.
முன்பெல்லாம் ஜீரோவாட்ஸ் என்று சொல்லப்படுகிற இரவுவிளக்குகள் பயன்பாட்டில் இருந்தால் அப்போது செலவாகும் மிகக்குறைந்த பட்ச மின்சாரம் கணக்கிடப்படாது. இப்போது பொருத்தப்பட்டுள்ள புதியகருவி அதையும் கணக்கில் சேர்த்துவிடும் என்கிறார்கள்.
கடந்த ஆண்டு (2014) இதே காலகட்டத்தில் இருந்ததைக் காட்டிலும் மின்வாரியத்தின் மின் கட்டண வருவாய் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருப்பதே சான்று.
வெளிப்படையாகக் கட்டணத்தை உயர்த்தியது மட்டுமின்றி இப்படி மறைமுகமாகவும் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குகிறது தமிழக அரசு.

Leave a Response