பிக்பாஸ் வெற்றியாளர் இவர்தானா(ம்)

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகவுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டியில் இருக்கிறார்கள். இந்த நான்கு பேரில் யார் வெற்றியாளர் என்பது இன்று (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் தெரியவரும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேற்றப்பட்ட பரணி, காயத்ரி ரகுராம், ஸ்ரீ, ஜூலி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட அனைவருமே இறுதிப் போட்டியின் காரணமாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள்.

ஓவியாவும் இன்று கலந்துகொள்கிறார். அவர், என்ன பேசப்போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாகவுள்ளனர். ஓவியாவுக்காக இன்று அனைவருமே பிக்பாஸ் பார்ப்பார்கள்.

இந்தப்போட்டியில் இறுதி வெற்றியாளராக கவிஞர் சினேகன் இருப்பார் என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response