மீண்டும் ஷங்கர்-கமல் கூட்டணி. இந்தியன் 2 ? முதல்வன் 2 ?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த ‘இந்தியன் படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர் கமல் கூட்டணியில் புதியபடமொன்று உருவாகவிருக்கிறது. அது தொடர்பாக கமல் – ஷங்கர் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ‘இந்தியன் 2’ உருவாக வாய்ப்புகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இச்செய்தியை இருவருமே மறுக்கவில்லை.

இந்நிலையில் இக்கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழ் – தெலுங்கு என இருமொழிகளிலும் ‘இந்தியன் 2’ உருவாகவுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று (செப்டம்பர் 30) நடைபெறும் பிக் பாஸ் இறுதிப் போட்டியில் கமல் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ‘2.0’ இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே அது இந்தியன் 2 கிடையாது முதல்வன் 2 என்றும் ஒரு பேச்சு உலாவருகிறது. முதல்வன் இரண்டாம்பாகம் எனில் அரசியல் நுழைவுக்கு அது சரியாக இருக்கும் என்று கமல், ஷங்கரை வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response