ஆந்திர அறிஞருக்குக் கொலை மிரட்டல் விடும் குறிப்பிட்ட சாதியினர்

பேராசிரியர் காஞ்ச்சா அய்லயா, ஆந்திரா/தெலங்கானா அறிவுலகத்தால்பெரிதும் மதிக்கப்படும் அறிஞர்.

இந்துமத ஜாதி ஆதிக்கத்தை தனது ஆயவு நூல்களால் அதிர வைத்தவர்.
2007 ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய அரசில் இருந்தபோது தனியார் துறையில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவருவதற்காக வீரப்பமொய்லி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அய்லயாவும் ஒரு உறுப்பினர்.
தனியார் துறையில் இடஒதுக்கீடு முறையை அறிமுகம் செய்வதற்கு அக்குழு முயற்சிகளை மேற்கொண்ட பொழுது அதற்கு தனியார் துறை நிர்வாகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அப்போதுதான் இந்திய தனியார் தொழில்துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்ற ஆய்வில் ஈடுபட்டார் பேராசிரியர் அய்லயா.

அவரது ஆய்வின் முடிவுகளின்படி இந்தியாவின் 46 % தனியார் துறை நிர்வாகமும் முதலீடும் வைசியர் எனப்படும் பனியா சமூகத்தின் கையில் உள்ளது என்ற உண்மை வெளியானது.

வைசியர்கள் எப்படி அந்த நிலைக்கு வந்தார்கள் என்பதை வரலாற்று ஆய்வுகளின் ஆதாரங்களோடு விளக்கி பேராசிரியர் அய்லயா அவர்கள் 2007ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆங்கில நூல் பத்து ஆண்டுகளுக்குப்பின்பு தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.

அந் நூலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர ஆரிய வைசிய சங்கம் பேராசிரியர் காஞ்ச்சா அய்லயா அவர்ளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மேலும் அவருக்கு இரவும் பகலும் இடைவிடாத தொலைபேசி மிரட்டல்கள்.

நான் சாவைக்கண்டு அஞ்சவில்லை.எந்த சமூகமும் எனக்கு எதிரியல்ல..
என்னுடைய ஆய்வு தவறு என்று அறிவுப்பூர்வமாக எழுதுங்கள். வாதம் செய்யுங்கள். மொழிபெயர்ப்பினால் தவறான பொருள்தரும் கருத்துக்களையும் அவர்கள் மனம் வருந்தும்படியான சொல்லாடல்களையும் மாற்றி வெளியிடவும் நான் தயார்.
பேசுவதற்கு நீங்கள் தயாரா என்று கேட்கிறார் பேராசிரியர் காஞ்ச்சாஅய்லயா.

இந்த பிரச்சினை குறித்தது TV9 என்ற தெலுங்கு தொலைக்காட்சி மிகச்சிறந்த விவாதம் ஒன்றை நடத்தியது ஆறுதல்.
அறிஞர்களைக் காப்பாற்றாத எந்தச் சமூகமும் நாடும் அந்நியர்களால் எளிதாக வெல்லப்படும்.அழிக்கப்படும்

(வழக்குரைஞர் அருள்மொழியின் பதிவிலிருந்து)

Leave a Response