விக்ரமுக்கு இயக்குனர் கவுதம் மேனன் நன்றி..!.


தற்போது இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகள் துருக்கி, இஸ்தான்புல் உள்ளிட்ட பல நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விக்ரம், சிம்ரன், ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குனர் கவுதம் மேனன், “விரைவில் துருவின் உலகுக்கு உங்களை அழைத்துச் செல்வேன் என நம்புகிறேன். அல்லது ஜானின் உலகத்துக்கு. அல்லது யோஹானின் உலகத்துக்கு. கடினமான படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த விக்ரமுக்கு நன்றி. அற்புதமான நடிகர் நடித்துக் கொண்டிருக்கும்போது நிழலில் நின்று இளைப்பாறுவதே சில சமயங்களில் சிறந்தது” என்று கூறியுள்ளார்.

Leave a Response