கால்பந்து போட்டியில், தங்கப்பந்து விருது பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவர்

அண்மையில் சென்னை ஒய் எம் சி ஏ கல்லூரி மைதானத்தில் 31 ஆவது கோல்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. அதில் பத்து வயதுக்குட்பட்டோருக்கான போட்டியும் இடம்பெற்றிருந்தது.

அப்போட்டியில் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியும் கலந்துகொண்டது. வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவன் ஆடம் ஜே.எல்.டேவிட் சிறப்பாக விளையாடினார்.

அவர், 30 கோல்கள் அடித்து சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருது பெற்றார்.

அதுமட்டுமின்றி இந்தக் கால்பந்தாட்டப் போட்டியின் தொடர்நாயகன் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

அம்மாணவனை வேலம்மாள் பள்ளி நிர்வாகமும் சக மாணவர்களும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Leave a Response