தினம் ஒரு பேச்சு, இன்னொரு ரஜினியாக மாறிவிட்டாரா கமல்?

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று (செப்டம்பர் 15-2017)நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழ் இந்து பத்திரிகை நிகழ்ச்சியில் கமல் தெரிவித்தார்.

மிக அண்மையில் ஆங்கில இணையதளமொன்றுக்கு அளித்த பேட்டியில், அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவேன் என அவர் கூறியிருந்தார்.

சில வாரங்களுக்கு முன்பாக, ட்விட்டரில், இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த அன்றே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், இது தம்பி ஜெயக்குமாருக்கும், எலும்பு வல்லுநர் ஹெச்.ராஜாவிற்கும் தான் தெரியவில்லை என்று சொல்லியிருந்தார்.

இப்படி அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசிக்கொண்டிருந்தவர் ரஜினி. இப்போது கமல் தினம் ஒன்று பேசுவதைப் பார்க்கும்போது, இன்னொரு ரஜினியாக மாறிக்கொண்டிருக்கிறாரோ என்கிற விமர்சனங்கள் வரத்தொடங்கிவிட்டன.

Leave a Response