மீண்டும் ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்..!


ரங்கூன்’, ‘இவன் தந்திரன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் கௌதம் கார்த்தி. அந்தவகையில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க காத்திருக்கும் கௌதம் காரத்தின் அடுத்த படமாக ஹரஹர மகாதேவகி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. கௌதம் கார்த்திக் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

சந்தோஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வெளியிடுகிறார். இந்தப்படம் எந்த அளவுக்கு ஞானவேல் ராஜாவுக்கு திருப்தி தந்துள்ளது என்றால், தனது அடுத்த படத்தையும் கௌதம் கார்த்தி-சந்தோஷ் கூட்டணியை வைத்து தயாரிக்க இருக்கிறார். படத்திற்கு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என டெரர் டைட்டிலை தலைப்பாக வைத்துள்ளார்கள்.

Leave a Response