நடிகர்கள்ல எப்பவும் நல்ல மனசுக்காரன் – அனிதா வீட்டுக்குச் சென்ற விஜய்க்கு பாராட்டு

1176 மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வால் மருத்துவக் கல்வி படிக்க முடியாமல் போனவர் அனிதா. நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். இறுதியில் செப்டம்பர் 1 ஆம் தேதி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

அனிதாவின் தற்கொலை தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சிகள், தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் அறிக்கை வெளியிட்டு சமூகவலைதளத்தில் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்கள்.

திரையுலக பிரபலங்களில் ஜி.வி.பிரகாஷ் உட்பட பலர் அரியலூர் சென்று அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருமே ட்விட்டர் தளத்தில் தங்களுடைய இரங்கலோடு நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தினருக்கு இன்று (செப். 11) நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.அனிதாவின் இல்லத்தில் இருந்த அவருடைய உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, குடும்பத்தினருடன் சில மணித்துளிகள் விஜய் பேசிக் கொண்டிருந்தார்.

இதனால், நடிகர்கள்ல எப்பவும் நல்ல மனசுக்காரன் விஜய் தான் என்று பலரும் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

Leave a Response