ஈழ மக்களை அடுத்துக்கெடுக்கிறாரா இங்கிலாந்து பிரதமர்?


பொதுநலவாய அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்திருக்கும் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை செவ்வாய்க்கிழமை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று உபசரித்துப்பேசிய டேவிட் கேமரன், புதிய ஜனாதிபதி மீது பிரிட்டன் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். இலங்கைக்குள் இருக்கும் தமிழர்கள் தொடர்பாக புதிய ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தமக்கு அந்த நம்பிக்கையை அளிப்பதாக கூறினார்.
மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஜனாதிபதியின் முன்முயற்சிகளை பிரிட்டன் ஆதரிப்பதாக தெரிவித்த கேமரன், மறுசீரமைப்பு, ஊழல் ஒழிப்பு, பிரிந்துகிடந்த இலங்கையை ஒன்றாக்குவதற்கான முயற்சிகள் என புதிய அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் கூறினார்.
முன்னதாக லண்டனில் இருந்து வெளியாகும் தமிழ் கார்டியன் பத்திரிக்கையில் தனிக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்த கேமரன்,
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை திட்டமிட்டபடி இந்த மாதம் வெளியிடப்படாமை தொடர்பில் தமிழர்களின் கோபத்தை தாமும் பகிந்துகொள்வதாகவும் கேமரன் கூறியிருந்தார்.
தமிழ்மக்களுக்கு ஆதரவாகப் பேசுவது போலக் காட்டிக்கொண்டே ஈழத்தமிழ்மக்களுக்கு எதிராக அவர் செயல்படுவதாக தமிழ் ஆர்வலர்கள் சொல்கின்றனர். ஐநா மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு சிங்கள இனவெறியர்களால் செய்யப்பட்ட கொடுமைகள் நிருபணமானால் ஈழத்தமிழ்மக்களின் தனித்தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கை முன்னெடுக்கப்படும், கேமரூனோ, அதற்கு நேரெதிராக பிரிந்துகிடந்த இலங்கையை ஒன்றாக்குவதற்கான நடவடிக்கைகளை வரவேற்பதாகச் சொல்லியிருப்பதை ஈழமக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் ஒருவரை எதிர்த்துக் கெடுப்பது ஒருவகை, கூட இருந்தே அடுத்துக்கெடுப்பது இன்னொருவகை. மிகவும் ஆபத்தான இரண்டாவது வகையை கேமரூன் கடைபிடிக்கிறார் என்றும் சொல்கின்றனர்.

Leave a Response