வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக மாறியவர் கிருத்திகா உதயநிதி.. அந்தப்படம் வெளியாகி சில வருடங்கள் இடைவெளி விட்ட கிருத்திகா, தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘காளி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் மொத்தம் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்களாம்.
முதலில் சுனைனாவும் ‘படைவீரன்’ படத்தில் நடித்துள்ள அம்ரிதாவும் இந்தப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து தற்போது நடிகை அஞ்சலியும் கன்னட நடிகை ஷில்பா மஞ்சுநாத்தும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர்.. நான்கு பேர் இருந்தாலும் அனைத்து நாயகிகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தரப்பட்டும் வகையில் கதை அமைந்துள்ளதாம்.