இயக்குனர் ராமை நெகிழ வைத்த மம்முட்டி..!


தரமணி படத்தை தொடர்ந்து மம்முட்டியை வைத்து ‘பேரன்பு’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம். அப்பா-மகள் பாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் பிரமாதமான திரைப்படமாக ‘பேரன்பு’ உருவாகியிருக்கிறது. சமீபத்தில், ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ திரைப்படம், அவருக்குப் பெரும் பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

மூன்று படங்களை தரமாக இயக்கியிருந்தாலும், இயக்குனர் ராம் பணரீதியாகக் கஷ்டப்படுகிறார் என்கிற விஷயம் மம்முட்டி மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் தன்னை சந்தித்த வியாபார புள்ளி ஒருவரிடம், தரமணி’ படம் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன். இந்தப்படத்தின் மூலமா ராம் கொஞ்சம் பொருளாதார ரீதியா நிமிர்ந்து விடுவார் இல்ல..? என அக்கறையோடு விசாரிதாரம் மம்முட்டி. இந்த தகவல் ராமின் கவனத்துக்கு வந்ததும் மம்முட்டியின் அக்கறையை என்னை நெகிழ்ந்துவிட்டாராம் ராம்.

Leave a Response