இயக்குநர் படிப்புக்கு நான்கரை இலட்சம்- தனஞ்செயனின் நல்முயற்சியில் உள்ள குறை

தமிழகத்தில் திரைப்படத்துறையில் நுழைய விரும்புகிறவர்களுக்கு, வாய்ப்பாக அரசுதிரைப்படக்கல்லூரி மற்றும் ஒருசில தனியார் பயற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. அரசு திரைப்படக்கல்லூரி தவிர மற்றவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான். அரசுதிரைப்படக்கல்லூரியிலும் படிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு வலிமையிழந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்நிலையில் திரைப்படத்துறை ஆர்வலர்களுக்கு நல்வாய்ப்பாக நீலக்கடல் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (புளு ஓசன் பிலிம் அண்ட் டெலிவிசன் அகாடமி) என்கிற புதியநிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். யுடிவி திரைப்படநிறுவனத்தில் பணியாற்றிய கோ.தனஞ்செயன், தயாரிப்பாளர்கள்சங்கச் செயலாளர் .சிவா, ஆகியோரது முயற்சியில் இந்நிறுவனம் தொடங்கவிருக்கிறது.
இயக்குநர்கள் பயிற்சிக்கு இயக்குநர் மகேந்திரன் தலைமையில் பெரியகுழு, நடிப்புப் பயிற்சிக்கு நாசர் தலைமையில் ஒரு குழு, திரைக்கதைப்பயிற்சிக்கு பாக்யராஜ் தலைமையில் ஒரு குழு ஒளிப்பதிவுக்கு மதுஅம்பாட், படத்தொகுப்புக்கு லெனின் என்று தமிர்த்திரையுலக வெற்றியாளர்களயே பயிற்றுவிப்பர்களாக ஆக்கியிருப்பது இந்நிறுவனத்துக்குப் பலமாக அமையும். கோடம்பாக்கத்திலுள்ள ரவிபரசாத் திரைப்படஅரங்கத்தில் தொழில்நுட்பவசதிகளைக்கொண்டு பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று சொல்கிறார்கள்.
நல்லமுயற்சிதான் என்றாலும் இந்நிறுவனத்தில் திரைப்படஇயக்குநர் பயிற்சிக்குச் சேரவிரும்பும் நபருக்கு நுழைவுக்கட்டணம் நான்கரைஇலட்சம் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையெனில் உண்மையான ஆர்வலர்கள் அவ்வளவு செலவு செய்து படிக்கமுடியுமா? என்கிற கேள்வியும் அவ்வளவு பணம் கட்டிப் படிக்கவருகிறவர்கள் உண்மையான திரைப்படநேயர்களாக இருப்பார்களா? என்கிற கேள்விகள் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

Leave a Response