நட்புக்காக வந்த வெங்கட்பிரபு – இவனுக்கு தண்ணில கண்டம் படக்குழு மகிழ்ச்சி


சின்னத் திரையில் மிகவும் புகழ்பெற்ற  ”சின்ன பாப்பா பெரிய  பாப்பா ‘ போன்ற வெற்றித்தொடர்களின் இயக்குனரான சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படம்

‘இவனுக்கு தண்ணில கண்டம்’. இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா மார்ச் 3 ஆம் நாள் நடைபெற்றது. இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் அவருடைய குழுவினர் பாடல்களை வெளியிட்டனர். இந்தப்படத்தின் நாயகன் தீபக், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிற நேரத்தில் ஏற்பட்ட நட்புக்கு மரியாதை செய்யும் விதமாகவே இங்கு வந்தாராம் வெங்கட்பிரபு.

விவிஆர்சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் இந்தப்படத்தைத்தயாரிக்கிறார் வி.வெங்கட்ராஜ்,
வாழ்வில் எல்லாக் கட்டத்திலும் தோல்வியைச் சந்திக்கும் ஒரு தொலைக் காட்சி தொகுப்பாளர் எதிர்பாராவிதமாக ஒரு கேளிக்கை விருந்தில் பங்கேற்க நேரிடுகிறது. தன்னிலை மறந்து அவன்இருக்கும் சில நிமிடங்கள் அவன் வாழ்கையைப் புரட்டிப்போட எத்தனிக்கிறது.அதன் தொடர்ச்சியாகநடக்கும் சம்பவங்களும் அவனுக்கு அந்த நிமிடங்கள் சாதகமா அல்லது பாதகமாஎன்பதையும் சிரிக்கச் சிரிக்க சொல்லி  இருக்கிறேன். எல்லாத்தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும்.’ என்கிறார் இயக்குனர் எஸ் என் சக்திவேல்.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் கதாநாயகனாக நடிக்க
புது முகம்  நேஹா. பாண்டிய ராஜன், சுப்பு பஞ்சு, மனோ பாலா, எம் எஸ்பாஸ்கர் , சென்ட்ராயன்,’ நான் கடவுள்’  ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடித்து உள்ளனர். A7 என்ற ஒரு புது இசை குழு இசை அமைப்பாளர்களாக  அறிமுகமாக ,
கானா பாலா, யுக பாரதிமற்றும் கண்ணன் பாடல்களை இயற்றி
உள்ளனர். ஒளிப்பதிவு ஆர்.வெங்கடேசன்.

Leave a Response