பிக்பாஸ் நிகழ்ச்சியால் சன் தொலைக்காட்சி பக்கத்தில் கூட நிற்கமுடியவில்லையாம்

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே,தமிழில் வருகிற எல்லாத் தொலைக்காட்சிகளையும் விஜய் தொலைக்காட்சி முந்திவிட்டது. இனிமேல் சன் தொலைக்காட்சி முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்லிக்கொள்ள முடியாது என்று தொடங்கி தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் மட்டுமே இருக்கிறது மற்றதெல்லாம் காலி என்ற அளவுக்குப் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

அதற்கேற்றாற்போல விஜய் தொலைக்காட்சியும் இதுவரை இல்லாத அளவு விஜய் முன்னிலை வகிக்கிறது என்று சில புள்ளிவிவரங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

இதனால் விவரமறிந்தோர் என்று நம்பப்படும் சிலரே இனி சன் எல்லாம் அவ்வளவுதான், விஜய்யை அசைக்கமுடியாது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு சன் தொலைக்காட்சி ஒரு புள்ளிவிவரத்தைக் கொடுத்து, இந்தியாவிலேயே சன் தொலைக்காட்சிதான் முதலிடம் என்று சொல்லியிருக்கிறது.

அதன்படி இந்திய அளவில் ஸ்டார்ப்ளஸ் தொலைக்காட்சிக்கு ஐந்தாம் இடம்தான் கிடைத்திருக்கிறது.

இதைப்பார்த்ததும் பிக்பாஸ் வந்து தமிழில் எல்லாத் தொலைக்காட்சிகளையும் காலி செய்துவிட்டது என்று சொன்னவர்கள் வாயடைத்துப் போயிருக்கின்றனர்.

Leave a Response