ஜார்கண்ட் பழங்குடிப் பெண்களிடம் மோடி பாடம் கற்கவேண்டும்

இந்திய ஒன்றியத்தின் வட மாநிலங்களில் ரக்‌ஷாபந்தன் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நாளில் தனது சகோதரர்கள் நலமுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி சகோதரிகள் கையில் ராக்கி கட்டி விடுவார்கள். ராக்கி கட்டிய சகோதரிகளுக்கு, அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து சகோதரர்கள் மகிழ்வார்கள்.

இன்று (ஆகஸ்ட் 7-2017) ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு வடமாநிலங்களில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பெண்கள் ராக்கி அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூர் பகுதிகளில் உள்ள பழங்குடிகள் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மரங்களுக்கு ராக்கி அணிவித்து ரக்‌ஷா பந்தனை வித்தியாசமாகக் கொண்டாடினர்.

இயற்கையைப் பாதுகாக்கவேண்டும் என்கிற தாய்மை உணர்வோடு பெண்கள் செய்த இச்செயல் இயற்கையை போட்டிபோட்டுக்கொண்டு அழிக்கும் அரசுகளுக்கு நல்ல பாடமாக அமைந்திருக்கிறதெனலாம்.

Leave a Response