சிவாஜி சிலை அகற்றம் ; சேரன் கொந்தளிப்பு


போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கூறி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி சிலை, இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் சிவாஜி நினைவு தினத்தை முன்னிட்டு, ’நடிகர் திலகம் ஒரு நிகரில்லா வரலாறு’ என்ற பெயரில் சிறப்பு வீடியோ ஒன்றை தயாரித்தவர் இயக்குனர் சேரன். அப்படிப்பட்ட சேரனை சிவாஜி சிலை அகற்றப்பட நிகழ்வு கொந்தளிக்க வைத்துள்ளது.. அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். சேரன்.. இதோ அந்த கவிதை…

நாய்..நரிக்கெல்லாம்..
சிலை இருக்கும்..
இம் மண்ணில்..
எம் காவிய நாயகனுக்கு
சிலை இருக்கக் கூடாதா..?

கடற்கரை முழுக்க
ஊழல் கறைப் பட்டோர்
கல்லறைகளாய் கிடக்க..
இம் மண்ணின்
வைர மகனுக்கு
எம் மண்ணில்
சிலை இருக்கக்
கூடாதா..

சோபன்பாபுக்கு சிலை..
வீரம் பேசி கலை
வளர்த்த எம்
திரைத் திலகத்திற்கு
சிலை இருக்கக் கூடாதா..

காறித் துப்பக்கூட
வெறுப்பாக இருக்கிறது..
உள்ளுக்குள் சினமேறி
நெருப்பாக கொதிக்கிறது…

இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.

Leave a Response