போர்பிரேம்ஸ் கல்யாணம் மணிவிழா

சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் பின்னால் இருக்கிறது ‘4’ பிரேம்ஸ் என்ற அதிநவீன பிரிவியூ தியேட்டர். இங்கே இருக்கும் 2 தியேட்டர்களில் படம் பார்க்காத  திரைப்பிரபலங்கள்  இருக்க முடியாது.

ரஜினியில் ஆரம்பித்து, கமல்,விஜய்,அஜித், சூர்யா உட்பட எல்லா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் இங்கேதான் படம் பார்ப்பார்கள். திரையரங்குகளுக்குச்  சென்று  நிம்மதியாக படம் பார்க்க முடியாததால் இங்கே வந்து படம் பார்ப்பார்கள். குட்லக் தியேட்டர் என்ற பெயரில் ஒரு காலத்தில் பிரிவியூ தியேட்டரை மறைந்த தயாரிப்பாளர் ஜி.விநடத்தினார். அப்புறம், 4 பிரேம்ஸ் என்று பெயர் மாற்றி, சில கோடி செலவில் நவீன படுத்தி பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும், அவருடைய மனைவியும் நடிகையுமான லிசியும் தியேட்டரை நடத்திவருகிறார்கள்.
பிரிவியூ தியேட்டர் மட்டுமல்ல, இங்கே டப்பிங், டிடிஎஸ் மிக்ஸ் என பல போஸ்டர் புரொடக்ஷன் வேலைகளும் நடக்கிறது. முன்னணி நடிகர்கள் இங்கே தினசரி டப்பிங் பேசிக்கொண்டு இருப்பார்கள். இங்கே பல ஆண்டுகளாக மானேஜராக இருப்பவர் கல்யாணம்
விரும்தோம்பல் திலகம் என்று அவரை அழைக்கலாம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவருடைய குடும்பத்தினர். தமிழகத்தின் முன்னணி அரசு அதிகாரிகள், நீதிபதிகள், போலீஸ் ஆபீசர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் படம் பார்க்கும் தியேட்டர் இது. அது மட்டுமல்ல, பத்திரிகையாளர்களுக்கான காட்சிகளும் பெரும்பாலும் இங்கே நடக்கும். சென்சாருக்காக அதிகாரிகள் இங்கே படம் பார்ப்பார்கள். அத்தனைபேரையும் அன்போடு அரவணைத்து, குடும்ப உறுப்பினர்கள் மாதிரி பாசமாக பழகுபவர் கல்யாணம். அவருடைய அன்புபிடியில் சிக்காதவர்கள் இருக்க முடியாது.

சென்னை மவுண்ட்ரோட்டில் இருந்த ஆனந்த் தியேட்டரில் தனது பணியை தொடங்கிய கல்யாணம் இப்போது 4 பிரேம்ஸ்சில் செவ்வனே பணிபுரிகிறார். இந்த துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். கல்யாணம் அவர்களின் உபசரிப்புக்கு மட்டுமல்ல, அவருடைய இனிமையான, சுவாரஸ்யமான பேச்சுக்கும் பலர் ரசிகர்கள். ஆயிரக்கணக்கான ஸ்பெஷல் ஷோக்களை நடத்தி, அனைவருக்கும் சிறப்பாக சினிமா காண்பி த்தாலும், தான் படம் பார்க்கமாட்டார். இதுவரை அவர் சினிமா பார்த்தது இல்லை என்பது முரண்.

கல்யாணம்-ஷோபனா தம்பதியினருக்கு  நவம்பர் இரண்டாம்நாளன்று  மணிவிழா. நடிகர் ரஜினிகாந்த்துக்கு சொந் தமான கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமணமண்டபத்தில் இனிதே நடந்தது. திரையுலக பிரபலங்கள், பல்துறை பிரபலங்கள்  கலந்துகொண்டனர்.

இவர்கள் மேன்மேலும் உயர, இதே சந்தோசத்தில் இன்னும் 20 ஆண்டுகள் கழித்து சதாபிஷேகம்(80வது பிறந்தநாள்விழா) கொண்டாட  வாழ்த்துகிறோம்.

Leave a Response