ஆகஸ்ட்-11ல் பலத்த போட்டி..!


இந்த வருடம் சுதந்திர தின விடுமுறைக்கு முந்திய வெள்ளிக்கிழமை ஆகஸ்ட்-11ஆம் தேதியே வருவதால், நிறைய படங்கள் தங்களது படங்களை இந்த தேதியில் ரிலீஸ் செய்வதில் ஆர்வம் கட்டி வருகின்றன.. தற்போதைய நிலவரப்படி சுமார் ஐந்து படங்கள் போட்டியில் இருக்கின்றன.

தனுஷ் நடிபில் மிகுந்து எதிர்பார்ப்பிற்கு ஆளாகியுள்ள ‘வி.ஐ.பி-2’, உதயநிதியின் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’, இயக்குனர் ராமின் ‘தரமணி’, விதார்த் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ மற்றும் பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள ‘தப்பு தண்டா’ ஆகிய படங்கள் இப்போதே வரிசைகட்டிக்கொண்டு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டன. ஆக, ஆகஸ்ட்-11 மிகப்பெரிய போட்டிக்கான நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Response