ஓவியா வை அதிகம் பிடிப்பதற்கு காரணம் இதுதான்

உங்கள் வீட்டில் ஓவியாக்களை ஏற்றுக் கொள்ளமுடியுமா ?
கடந்த இருபது நாட்களாய் தமிழர்களின் தலையாய பிரச்சனை சரியான தலைமைத்துவம் இல்லாததோ அல்லது தலைநகரத்தில் இருந்து நமக்கு வரும் பிரச்சனையோ இல்லை. பிக்பாஸ் வீட்டில் தலைவி ஓவியாவை தக்க வைக்க ஓட்டு, பாட்டு, போஸ்ட், மீம்ஸ் போடுவதே கடமை என கடந்து வரும் ஆண்களிற்கு சில கேள்விகள்.
ஐ சப்போர்ட் ஓவியா என்று கொந்தளிக்கும் நீங்கள், நாயகி ஓவியாவைவிட நிஜ ஓவியாவை இவ்வளவு திரளாய் ஆதரிக்கும் உங்களால் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களிடம் ஓவியாவிடம் இருக்கும் ஒரு குணம் இருந்தால் கூட அதை ரசிப்பீர்களா? ஆதரிப்பீர்களா ?
1. உங்கள் வீட்டில் திருமண வயதில் இருக்கும் ஒரு பெண் மழையில் நனைவதை தடுக்காமல் எந்தவித உறுத்தலும் இல்லாமல் ரசிக்க முடியுமா?
2. தனக்கு விருப்பமான நேரத்தில் மட்டும் வேலைசெய்வேன், பிடித்த நேரத்தில் படுக்கையை விட்டு எழுவேன் என்று இருக்கும் ஒரு அம்மாவை ஏற்று கொள்ளமுடியுமா ?
3. வீட்டில் இருக்கும் சக ஆண்களோ அல்லது வெளியில் இருக்கும் ஒரு ஆணிடம் உங்கள் வீட்டில் ஒரு பெண் “சட் அப்” என்று சொல்லும் போது அதை கொண்டாட முடியுமா?
4. கண்ணாடியில் தன் அலங்காரத்தை ரசிக்கும் போது உங்களால் சேர்ந்து அவர்கள் குழந்தை தனத்தை ரசிக்க முடியுமா?
5.நடுஇரவில் ஒரு பெண், இரண்டு ஆண் நண்பர்களுக்கு இடையில் படுத்து இருப்பது காமத்தை தேடி அல்ல ஆறுதல் தேடி மட்டும் தான் என்று பக்குவமாய் புரிந்து கொள்ள முடியுமா ?
6. ஓங்கி அரஞ்சுடுவேன் என்று நீங்கள் சொல்லும் போது அடங்கி போகாமல் ‘முடிச்சா அடிடா பார்ப்போம்’ என்று எதிர்த்துth நிற்கும் பெண்ணை திமிர்பிடித்தவள் என்று முத்திரை குத்தாமல் துணிச்சல் மிக்கவள் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா ?
மெரினாவில் ஓவியாவிற்காய் கூடுவோம் என்று அழைப்பு விடுப்பதும், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியா எலிமினேட் ஆகாமல் காப்பாற்ற பாடுபடுவதும் என்று இருக்கும் ஆண்கள் கொஞ்சம்
உங்கள் வீட்டு ஓவியாக்களை நீங்கள் ரசிக்க ஆரம்பித்தால் பெண்களுக்கு எதிராய் நடக்கும் பல வன்கொடுமைகளை எதிர்கொள்ள, தன்னம்பிக்கை மிக்க ஓவியாக்கள் இன்னும் அதிகம் பிறப்பார்கள். புகுந்த வீட்டில் இருந்து மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை என்று வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டு வாழ்க்கையை தொலைக்க வேண்டியது இருக்காது உங்கள் ஆதரவு கிடைக்கும் போது.
ஆண்களை தாண்டி பல பெண்களுக்கும் ஓவியா வை அதிகம் பிடிப்பதற்கு காரணம் சமூகத்ததால் மழுங்கடிக்கபட்ட, கட்டாயமாய் மறைக்கபட்ட பெண்களின் நிஜ ஏக்கங்களின் மொத்தம் ஓவியா.

-Arun Padmaja

1 Comment

  1. Sir if there is such a girl in our house then we wont think all the questions that you asked here.. everyone will be like her where she live..but onething you have to be a good human being not like other peoples in that big boss house.. be a simple person as you are now but the girl have to be like true Oviya not like other way.. just understand why everyone support oviya because of they see first time such a true girl in their life.. you wont understand it if so you wouldn’t thought like this… but try to help in every house to grow up such a brilliant girl in everyone house.. 🙂 tc

Leave a Response