ஏன் ஓவியா வெறியனாக இருக்கிறேன் – மென்பொருள் பொறியாளரின் வாக்குமூலம்

ஏன் ஓவியா? ஏன் பிக் பாஸ்?
நிறைய நண்பர்கள் கேட்கிறார்கள், ஏன் பிக் பாஸ் பற்றி எழுதற? ஓவியா வெறியனா இருக்க ? நாட்டில் எவ்வளவோ இருக்கே, பிக் பாஸ் மட்டும் தானா என்று?
பிக் பாஸ்சும் ஓவியாவும் எனக்கு தினம் தினம் வாழ்க்கைப்பாடம் நடத்துகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய மேலாண்மை மற்றும் தன் முயற்சி புத்தகங்கள் படிப்பது அது தொடர்பான உளவியல்களை ஆழ்ந்து கவனிப்பது அதை வேலை வாழ்க்கை சமூகத்தில் எப்படி பயன்படுத்துவது என முயற்சித்து வருகிறேன்.
ஓவியாவை போல சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய தருணத்தில் நின்று ஆடாமல் பரணியை போல சுவர் ஏறி குதித்து வெளியேறினேன், ஆனால் சுவருக்கு வெளியேயும் நான் குதித்திருந்தது இன்னொரு பிக் பாஸ் வீட்டில். அங்கே இன்னொரு காயத்ரி, இன்னொரு சினேகன், திரும்பவும் சுவர் ஏறி ஏறி எத்தனை முறை குதிப்பது?
நான் படித்த புத்தகங்கள், சென்ற பயிற்சி பட்டறைகள் எல்லாம் எப்படி நாம் ஓவியா போல் மகிழ்ச்சியாக இருப்பது என்று தான் பாடம் எடுத்தார்களேயொழிய நம்மை சுற்றி காயத்ரிகள், சினேகன்கள், ஜூலிக்கள், நமீதாக்கள் இருப்பார்கள் என சொல்லவில்லை, இங்கே தான் எனக்கு பிக் பாஸ் புதிய யாரும் சொல்லித்தராத பாடங்களை கற்றுத்தருகிறது.
எங்கெங்கினும் பிக் பாஸ் வீடுதான் என்னும் போது பிக் பாஸ் வீட்டில் சினேகனை போல ஓநாயாக வலம் வருவதா? ஜூலியை போல் அடிமை நாயாக வலம் வருவதா? ரைசா வை போல ஜிங் சாவாக இருப்பதா? நமீதா வை போல கிழ சிங்கமாக ஈன சுவரத்தில் முனகிக்கொண்டு இருப்பதா? ஆர்த்தியைப்போல் அவசரப்பட்டு எவிக்ட் ஆவதா?
நிச்சயம் இல்லை, பரணியை போல் சுவர் ஏறி குதித்து ஓடுவதை விட ஓவியாவை போல எப்படி அசால்ட்டாக எதிர் கொள்வது என்பதை கற்றுக்கொள்ள பார்க்கிறேன்.
பிக் பாஸ் நாடகமாக இருக்கட்டும், ஸ்க்ரிப்ட் படி நடிப்பதாக கூட இருக்கட்டும், ஸோ வாட், எனக்கு கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. பிக் பாஸை வேறொரு கோணத்தில் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கேரக்டர்களுடன் பொறுத்தி பாருங்கள், வாழ்க்கையையும் மனிதர்களையும் புரிந்து கொள்ள கற்றுக்கொள்ள நிறைய கிடைக்கும்.
ஓவியா போல சிறகடித்து வாழ ஆசைப்பட்டாலும் பல நேரங்களில் பரணியாக பயந்து ஓடி, சினேகனாக நரித்தனமாக வலம் வந்து, கிழ சுங்கம் நமீதாவாக கையாலாகாமல் புலம்பி, ஜூலியை போல் அடிமை நாயாக சுற்றி, ரைசாவை போல் வாலாட்டி, கணேஷ் போல ஜெண்டில் மேனாக காட்டிக்கொண்டு, ஆர்த்தியை போல் அவசரப்பட்டு எவிக்ட் ஆகி வாழ்க்கை என்னும் பிக் பாஸ் வீட்டில் காலத்தை கழிக்கிறேன்.
ஆமாம் இது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தான், காசுக்காக தான் நடத்துகிறார்கள், நடிக்கிறார்கள், ஸோ வாட் இதிலிருந்து கற்க எனக்கு நிறைய இருக்கு, அட அப்படியே இல்லைன்னாலும் இதை பார்க்க எனக்கு பிடிச்சிருக்கு, இது பற்றி புறணி பேச பிடிச்சிருக்கு, தட்ஸ் ஆல்…

– பொன்னுசாமி புருசோத்தமன், மென்பொருள் துறை, சிங்கப்பூர்

Leave a Response