லண்டன் வராமல் தப்பி ஓடிய சுவாமி !

ஈழத் தமிழர்களுக்கு இது தெரியக்கூடாது என்று இந்திய சக்திகள் வெகுவாக மூடிமறைத்த விடையங்களில் இதுவும் ஒன்றுதான். லண்டனில் இந்து அறநிலையம் என்னும் அமைப்பும் இந்து நகர நெட்வேர்க் என்னும் அமைப்பும் இணைந்து ஒரு வி.ஐ.பி விருந்து வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் யார் வி.ஐ.பி என்று நீங்கள் கேட்ப்பீர்கள். வேறு யாரும் அல்ல சாட்சாத் சுப்பிரமணிய சுவாமி தான் !

சுவாமி 1.11.20144 (சனிக்கிழமை) நடைபெறவுள்ள இந்த வி.ஐ.பி விருந்துபசாரத்தில் கலந்துகொள்ள, நேற்று(29) இந்தியாவில் இருந்து லண்டன் வந்திருக்கவேண்டும். ஆனால் வரவில்லை. அவர் கலந்துகொள்ள இருந்த அந்த நிகழ்வையே முற்று முழுதாக ரத்துச் செய்துவிட்டதாக இந்திய ஹிந்து அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது. அது ஏன் அப்படி நடந்தது என்று விசாரிக்கப்போனால், சில விடையங்கள் கசிந்துள்ளது. சு.சுவாமி ஒரு ஈமெயில் லண்டனில் உள்ள அமைப்புக்கு நேற்று முந்தினம் அனுப்பியுள்ளாராம். அதில் எனது பாதுகாப்பு காரணத்தால் நான் லண்டன் வரவில்லை என்று எழுதி இருக்கிறார். அட லண்டனில் என்ன பாதுகாப்பு குறைவு என்று உடனே எண்ண தோன்றும். ஆம் இங்கே உள்ள ஈழத் தமிழர்கள் சு.சுவாமிக்கு சப்பற திருவிழா ஒன்றையல்லவா நடத்தி இருப்பார்கள் ? அதை நாசூக்காக அறிந்துவிட்டார் சுவாமி !

மகிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்கள் வெறுக்கும் அடுத்த நபர் சு.சுவாமி தான். ஒருவேளை அவர் லண்டன் வந்திருந்தால் பாரிய விளைவுகள் தான் ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதில் மேலும் ஒரு சுவாரசியமான விடையம் ஒன்றும் உள்ளது. அது என்னவென்றால் ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழும் வெம்பிளி நகரில் உள்ள, உணவம் ஒன்றில் தான் சுவாமியின் விருந்து உபசாரம் நடக்க இருந்ததாம். அந்த இடத்தையே முற்றுகையிட்டு ஒரு வழியாக்கி இருந்திருப்பார்கள், லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள். மகிந்த ராஜபக்ஷ் லண்டன் வந்தால் என்ன நடக்குமோ அது தான் சு.சுவாமிக்கும் நிச்சயம் நடந்திருக்கும். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் அதனை அறிந்துவிட்டார். லண்டனில் சு.சுவாமிக்கு நெருக்கமான சிலர், இங்கே இப்போது வரவேண்டாம் தமிழர்கள் கொலைவெறியில் இருக்கிறார்கள், என்று அட்வைஸ் செய்துள்ளார்களாம்.

தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் சு.சுவாமி மீது எவ்வளவு கடுப்பில் இருக்கிறார்களோ, அதே அளவு கோபத்தில் தான் லண்டனிலும் உள்ள தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு பயந்து சு.சுவாமி எப்படி லண்டன் வராமல் ஓடி ஒளிந்தாரோ அதுபோல, தமிழ் நாட்டிற்குள்ளும் அவரை வரவிடாது செய்ய தமிழர்கள் விழிப்பாக இருப்பது அவசியம் !-நன்றி- அதிர்வு

 

Leave a Response