‘ராட்சசன்’ ஆக அவதாரம் எடுக்கும் விஷ்ணு..!


‘முண்டாசுப்பட்டி’ வெற்றிப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்தை வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக இயக்குகிறார் இயக்குனர் ராம்குமார்.. அவரது முதல் பட நாயகன் விஷ்ணு தான் இதிலும் நாயகனாக நடிக்கிறார்.. இந்தப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக குடும்பப்பாங்கான கேரக்டரில் நடிக்க கதாநாயகி தேடிய ராம்குமார், அதற்கு பொருத்தமான தேர்வாக அமலாபாலை ஒப்பந்தம் செய்துள்ளார்..

தற்போது இந்தப்படத்திற்கு ‘ராட்சசன்’ என பெயர் வைத்து அதன் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர். இந்தப்படத்தில் முண்டாசுப்பட்டி குரூப்பான காளி வெங்கட், முனீஸ்காந்த் ஆகியோரும் உண்டு.. இந்தப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் இதுவரை தமிழ்சினிமா பார்க்காத ஒன்றாம்.

Leave a Response