மோடி மிக மலிவாக நடந்துகொண்டு இருக்கிறார்

பிரதமராக இருக்கும்போதே நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்காக தன் உயிரைத் தியாகம்செய்த ஒரே பிரதமர் இந்திராகாந்தி . அவரது நினைவுநாளில் அஞ்சலி செலுத்தாமல் தவிர்த்திருப்பதன் மூலம் மோடி மிக மலிவாக நடந்துகொண்டு விட்டதோடு பிரதமர் பொறுப்பிற்குரிய மரியாதையையும் மலினப்படுத்தி இருக்கிறார் . எல்லைப் பிரச்சினையைக் கூட சரியாகக் கையாளத் தெரியாத அவருக்கு பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காக மிகுந்த துணிச்சலோடும் ,ராஜதந்திரத்தோடும் செயல்பட்டு அந்த தேசத்தையே இரண்டாகப் பிளந்த அந்த இரும்புப் பெண்மணியின் முன்செல்ல ஒருவேளை வெட்கமாக இருக்கிறதோ என்னவோ ! இந்திராகாந்தியின் பெயர் இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவின் பலநாடுகளில் சாதாரண மக்களின் இதயங்களில் எழுதப்பட்டு என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது . இந்தியாவின் தானியக்கிடங்குகளில் நிரம்பிவழியும் தானியங்களிலும் ,உலகமே நம்மை திரும்பிப் பார்க்க வைத்த அணுசக்தி திட்டங்களிலும்,பக்கத்து நாடுகளின் முதுகுத்தண்டை சில்லிடவைக்கும் பயத்திலும் (nuclear programme ) அவர் பெயரே எழுதியிருக்கிறது . இவையெல்லாம் இருக்கும் வரை இந்திரா இந்தியாவின் இதயத்தில் வாழ்வார் . இதை புரிந்துகொள்ளாமல் பிரதமர் பதவிக்கு கொஞ்சமும் பொறுத்தமில்லாமல் மலிவாக நடந்துகொண்ட மோடியைப் பார்த்து பரிதாபம்தான் ஏற்படுகிறது . மோடியிடம் இதைவிட வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதான் . ஆனாலும் மோடி அவர்களே பூனை கண்களை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடாது !

Leave a Response