சென்னையில் கிறித்துவ தேவாலயத்தை இடிக்க முயற்சி – தடுத்து நிறுத்திய முஸ்லிம்தலைவர்

வள்ளுவர் கோட்டம் அருகில் லேக் ஏரியா 7 வது தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவர்களின் வழிபாட்டுத்தலமான தேவாலயம் இயங்கி வருகிறது.

இந்தத் தேவாலயத்தின் மேல் தளம் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாக இந்துத்துவக்கும்பலைச்சார்ந்த சமூக விரோதிகள் வழக்குத் தொடுத்தனர். உயர்நீதிமன்றம் 17 ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருக்கிற சூழலில், காவல்துறை உதவியோடு சென்னை மாநகராட்சியினர் தேவாலயத்தின் மேல் பகுதியை ஜூலை 10 அன்று இடிக்க முயற்சி செய்தனர்.

தகவலறிந்த மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா, அப்துல் சமது, விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் நானும் சென்று இடிக்கிற போக்கைத் தடுத்து நிறுத்தினோம்.

பாசக, ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் களத்தில் நிற்போம் என்றும் கிறித்தவ மக்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்போம் என்றும் உறுதி அளித்தோம்.

காவல்துறை மற்றும் மாநகராட்சியின் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்துத்துவக் கும்பலுக்கு எதிராகக் கிறித்துவப் பெருங்குடி மக்கள் அணி திரளுவது ஏரோது மன்னனுக்கு எதிராக அணி திரளுவதாகும்!
மோடி என்னும் ஏரோது அரக்கனை ஒழித்துக்கட்ட கிறித்தவ மக்கள் களமாடுவது காலத்தின் கட்டாயம் !

-இது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வன்னிஅரசு எழுதியுள்ள முகநூல் குறிப்பு. கிறித்துவ தேவாலயத்தைப் பாதுகாக்க இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லா முன்வந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது. மதங்களைத்தாண்டிய மனிதநேயம் மிக்கது தமிழகம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Leave a Response