விஷாலின் அழைப்பை ஏற்பாரா ‘சண்டக்கோழி’ மீரா ஜாஸ்மின்..?


விஷால் விரைவில் லிங்குசாமி இயக்கும் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், 2018 பொங்கல் தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த இரண்டாகம் பாகத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மினும் இந்தப்படத்தில் நடிக்கவேண்டிய சூழல் இருக்கிறதாம். ஆனால் என்ஜினியரை மணந்து கொண்டு சினிமாவில் மீண்டும் நடிக்க விருப்பமில்லை என்று கூறி துபாயில் செட்டில் ஆகிவிட்டார் மீரா ஜாஸ்மின்.

சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் அனுஷ்கா நடித்தது போல, சாமி-2 வில் த்ரிஷா நடிப்பது போல இந்த சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் மீரா ஜாஸ்மின் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்பதால் விஷால் நேரடியாக துபாய்க்கு தனது உதவியாளரை அனுப்பி, எப்படியாவது மீரா ஜாஸ்மினை சம்மதிக்க வைத்து அழைத்து வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.

Leave a Response