“தமிழ் நடிகர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்” ; தெலுங்கு மீடியாக்கள் காட்டம்..!


சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தெலுங்கு நட்சத்திரங்கள் நடந்துகொண்ட விதம் ஆந்திர மீடியாக்களையே அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.. தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகியவற்றில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் விழாவை ஒரு பொருட்டாக மதிக்காமலேயே நடந்து கொண்டனர்..

தமிழ்நாட்டில் இருந்து இந்த விழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் விழா ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அரங்கத்திற்குள் வந்துவிட்டனர்… ஆனால் தெலுங்கு நட்சத்திரங்களோ விழா ஆரம்பித்தபின் ஒவ்வொருவராக சாவகாசமாக வந்தனர்.. சரி.. பொதுவாக பல விழாக்கள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்காமல் தாமதமாக ஆரம்பிக்கும் என்பதால் இப்படி லேட்டாக வந்ததாக வைத்துக்கொண்டலும், விருது வாங்கியதும் ஒரு மரியாதைக்காக கூட சற்று நேரம் அரங்கில் அமராமல் நேராக வாசலை நோக்கி சென்றவர்கள் தான் அதிகம்..

முன்னதாகவே வந்து அமர்ந்திருந்த சில தெலுங்கு வி.ஐ.பிகள், விருது வாங்கியதும் வெளியேறியதை வேண்டுமானால் கூட ஒப்புக்கொள்ளலாம்.. ஆனால் இன்னும் சிலரோ வந்த வேகத்தில் விருதை வாங்கியவுடன் வெளியேறிய செயல் பலரிடமும், குறிப்பாக தெலுங்கு மீடியாக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதில் நடிகர்கள் மட்டுமல்லாமல், நடிகைகளும் அடக்கம். ஆனால் இங்கே தமிழ் திரையுலகில் இருந்து சென்ற நட்சத்திரங்களோ குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்றவுடன் விழா முடியும் வரை பொறுமையாக இருந்து, விழா முடிந்த பின்னரே கிளம்பியுள்ளனர்… தமிழ் நட்சத்திரங்களிடம் இருந்து இந்த பழக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என சில தெலுங்கு மீடியாக்கள் வெளிபடையாகவே தெரிவித்துள்ளன.

Leave a Response