திருகோணமலை கடலில் இறங்கிய தமிழர்கள்- உலகின் கண்கள் திறக்காதா?


திருகோணமலை கடலில் இறங்கி காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் போராட்டம்!

தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று திருகோணமலையில் கடலில் இறங்கி வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னொலிகொடவின் மனைவியும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தி கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு என பல்வேறு மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் அனைவரும் திருகோணமலையில் ஒன்றுதிரண்டுள்ளனர்.

கிளிநொச்சி போராட்டம் நூறு நாட்களையும் கடந்து தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையில், முல்லைத்தீவில் நடைபெற்றுவரும் போராட்டம் நாளைய தினத்துடன் நூறு நாளை எட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Response