டெரர் லுக்கில் வெளியான ‘வேலைக்காரன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!


தனி ஒருவன்’ வெற்றிப்படத்துக்கு பிறகு இயக்குனர் மோகன்ராஜா தனது அடுத்த படமான வேலைக்காரன் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், நயன்தாரா என ஒருபுதிய கூட்டணியை உருவாக்கியுள்ள மோகன்ராஜா, இந்தப்படத்தில் மலையாள நடிகர் அஹத் பாசிலை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். சினேகா அவருக்கு ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இன்றுமாலை இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.. அதில் சிவகார்த்திகேயன் ஐடி வேலைக்கு செல்லும் இளைஞன் போல உடையணிந்து, ஒருகையில் ஹேண்ட்பேக்கும் இன்னொரு கையில் அரிவாளுமாக ரத்தக்கறை படிந்தநிலையில் நிற்பதை பார்க்கும்போதே இந்தப்படம் சிவகார்த்திகேயனை காமெடியில் இருந்து ஆக்சன் வளையத்திற்குள் இழுத்துக்கொண்டது என்று நன்றாகவே தெரிகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கவே செய்கிறது.

Leave a Response