விக்ரம் பிரபுவின் ‘சத்ரியன்’ ஜூன்-9ல் ரிலீஸ்…!


சுந்தரபாண்டியன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன்.. தற்போது இவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சத்ரியன்’. இந்தப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். முதலில் மே 19-ம் தேதி ‘சத்ரியன்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

ஆனால், தமிழ் திரையுலக வேலைநிறுத்த அறிவிப்பு காரணமாக வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது. அதன்பின் மறு ரிலீஸ் தேதி குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஜுன் 9-ம் தேதி ‘சத்ரியன்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

Leave a Response