மொழி விசயத்தில் பாகிஸ்தானிடம் பாடம் கற்பாரா மோடி?

ISLAMABAD: The Senate’s Standing Committee on Law and Justice on Wednesday passed “The constitutional (Amendment) Bill, 2016” seeking to give national status to Punjabi, Sindhi, Pashto and Balochi, as national languages along with Urdu.

உருது அல்லாத நான்கு மொழிகளை தேசிய மொழிகளாக்கி மொழி சமயுரிமையை வழங்குகிறது பாக்கிஸ்தான் . இந்திய அரசு பாடம் படிக்குமா ?

பாகிஸ்தானில் மிகக் குறைந்த அளவு மக்களுக்கே உருது தாய் மொழியாகும். அதிக அளவு மக்கள் பேசும் மொழி பஞ்சாபி ஆகும் . எனினும் இவ்வளவு காலம் பாகிஸ்தான் உருது மொழியை மட்டுமே தேசிய மொழியாக அங்கீகரித்து வந்தது . இது மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும் . இந்தியாவில் இந்தியை அரசு திணிப்பது போலவே பாகிஸ்தானிலும் உருது மொழியை தீவிரமாக திணித்து வந்துள்ளது பாகிஸ்தான் அரசு.

இந்நிலையில் இப்போது உருது தவிர பஞ்சாபி, சிந்தி, பலோச்சி, பாஷ்டோ உள்ளிட்ட நான்கு மொழிகளையும் தேசிய மொழியாக அறிவிக்க சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் உருது மட்டுமே தேசிய மொழி என்ற நிலை தகர்க்கப்பட்டுள்ளது. ஓரளவு பாகிஸ்தானில் மொழி சம உரிமை எட்டப்படும் என்று மக்கள் கருதுகிறார்கள்.
பாக்கிஸ்தானின் இந்த அணுகுமுறை பாக்கிஸ்தான் ஆட்சியாளர்களின் முதிர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது . இதே போல இந்திய ஆட்சியாளர்களும் இந்தி அல்லாத பிற தேசிய மொழிகளை ஆட்சி மொழியாக்க முன்வர வேண்டும் என்பதே மொழியுரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

உள்நாட்டில் மக்களுக்கு இந்தி அரசின் மீது நம்பிக்கையும் மதிப்பும் உயர வேண்டுமெனில் இந்திய அரசு தமிழ் உள்ளிட்ட ௨௨ மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வேண்டும். பாகிஸ்தானில் மொழிகளுக்கு சம உரிமைகள் கிடைக்கும் போது இந்தியாவில் ஏன் அந்த உரிமை கிடைக்கக் கூடாது? இனியாவது மோடி அரசு இந்தித் திணிப்பை நிறுத்திவிட்டு அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்.

– ராச்குமார்பழனிசாமி

Leave a Response