இனிமேல் படம் இயக்கமாட்டேன் என்று விஜய்யின் அப்பா சொன்னதன் பொருள் இதுதானா?

 

அண்மையில் வெளியான  ‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தை நடிகர் விஜய்யின் அப்பா  இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். அப்பட வெளியீட்டின்போது, இதுதான் நான் இயக்கும் கடைசிப்படம் என்று சொல்லியிருந்தார். அதனால் அவர் ஓய்வெடுக்கப்போகிறார் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது இன்ப அதிர்ச்சியா? துன்ப அதிர்ச்சியா? என்பது அவரவருடைய மனநிலையைப் பொறுத்தது.

ஆம், அவர் இப்போது முழுநேர நாயகனாக மாறிவிட்டாராம்.  இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களிடம் கூறிய ஒரு கதை மிகவும் பிடித்துப் போனதால், அப்படத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி. அப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தவிர இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படம், இந்தி திரையுலகில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பாக்பான் எனும் படத்தின் கதையை தழுவியது என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை விக்னேஷ், கிருஷ்ணா எனும் இரட்டை இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்’ எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

உண்மைதான்.

Leave a Response