சமந்தாவின் திடீர் சிலம்பாட்டத்துக்கு காரணம் இதுதான்..!


கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தா, நாக சைதன்யாவுடன் திருமணம் நிச்சயமானதைத் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அந்த வகையில் ரஜினிமுருகன் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சிலம்பாட்ட வீராங்கனையாக நடிக்கிறார் சமந்தா.

அந்த படம் இன்னும் தொடங்கப்படவே இல்லை என்றாலும், கடந்த பத்து மாதங்களாக அவ்வப்போது சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் சமந்தா. நேற்று முன் தினம் சமந்தாவின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொன்ன படக்குழுவினர் மூலம் சமந்தா சிலம்பாட்டம் பயிற்சி எடுத்து வருவது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

Leave a Response