பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கிறார் உதயநிதி..!


மலையாள சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பிரியதர்ஷன்.. தமிழிலும் கோபுர வாசலிலே, லேசா லேசா, காஞ்சிவரம், சில சமயங்களில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.. கடந்த வருடம் மலையாளத்தில் மோகன்லாலை வைத்து இவர் கடைசியாக இயக்கிய ‘ஒப்பம்’ படம் சூபர்ஹிட்டானது.

அதன்பின் அடுத்ததாக மலையாளத்தில் படம் இயக்குவார் என எதிர்பார்த்தால், தமிழில் படம் இயக்க முடிவுசெய்து விட்டார் பிரியதர்ஷன். இந்தப்படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார்.. இந்த காம்பினேஷனே ஆச்சர்யப்படுத்துவதாக இருக்கிறது. நிச்சயம் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிப்பது உதயநிதியை ஒரு புதிய ஆளாக மாற்றும் என்பது உறுதி.

Leave a Response